Latestமலேசியா

கர்ப்பிணியின் பிரசவத்துக்கு உதவிய – போலீஸ் பெண் கோமதி

கோலாலம்பூர், அக். 9 – இந்தோனேசிய மாது ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு, இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று பிரசவத்துக்கு உதவிய பெண் போலீசாரின் மனிதாபிமான செயல் பெரிதும் பாராட்டப்பட்டது.

திங்கட்கிழமை, பிற்பகல் 3.40 மணிக்கு தென்பகுதிக்கான ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து முனையத்தில் இருந்த போலீஸ் சாவடியில் இருந்த லான்ஸ் காப்ரல் என்.கோமதியின் உதவியை அந்த இந்தோனேசிய மாது நாடியுள்ளார்.

அவரின் இயலாத நிலையைக் கண்ட கோமதி, அந்தப் பெண்ணை ஒரு டாக்சியில் ஏற்றிக் கொண்டு துங்கு முக்ரிஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில், அந்தப் பெண்ணுக்கு டாக்சியிலேயே பிரசவமும் நடந்துள்ளதாக செராஸ் ஓசிபிடி முகமட் மோக்சீன் முகமட் சோன் தெரிவித்தார்.

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு, அவரின் கணவருக்கும் அது தெரிவிக்கப்பட்டது.

கோமதியின் மனிதாபிமான செயல் பெரும் பாராட்டைப் பெற்றது. கோமதி போலீஸ் துறையில் 2016 ஜனவரி 16இல் சேர்ந்து பினாங்கில் பணியாற்றிய பின்னர், 2017ஆம் ஆண்டு மார்ச்சில் சாலாக் செலாத்தான் போலீஸ் நிலையத்துக்கு மாறி வந்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker