Latestமலேசியா

கால்வாயில் விழுந்த சிறுவன்- மூழ்கி இருக்கலாம்

அம்பாங், அக். 9 – மாலை நேரத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன், கால்வாயில் விழுந்து, நீரில் அடித்துச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது

நேற்று மாலை 6.22 மணியளவில் புகாரைப் பெற்றதை அடுத்து, அங்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் விரைந்ததாகவும், அச்சிறுவன் சமயப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் கால்வாய்க்கு அருகில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், அதில் தவறி விழுந்ததாக பாண்டான் தீயணைப் படைத் தலைவர் முகமட் ஃபாட்சில் மாட் சின் தெரிவித்தார்.

சிறுவனைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது. தாமான் புக்கிட் தெராத்தாயில் உள்ள வீட்டில், சிறுவனின் தாயார் நூர் ஃபாரா வஹிடா முகமட் நூர்(வயது 34) என்பவர் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டிருக்கிறார். சிறுவனின் தந்தை இஸ்மா வாயுமி சுல்கிப்லி(வயது 25) தமது மகன் விரைவில் கண்டு பிடிக்கப்படுவான் என நம்புகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker