மலேசியா

குழந்தையின் பிட்டத்தை வெட்டி, தகப்பன் – கொடுமை

கோலாலம்பூர், அக். 9 – குழந்தை ஒன்று பிட்டத்தில் வெட்டப்பட்டு தரையில் கிடந்த காட்சி வீடியோவாக வைரலாகிப் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்தக் குழந்தையின் அவல நிலையை எடுத்துக்கூறும் வகையில் அந்த வீடியோ வெளியிடபட்டிருந்தது.

அந்தக் குழந்தையின் கையில் காயத்தை வைத்துப் பார்க்கும்போது, அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடியதாகத் தெரிகிறது.

அந்த வீடியோவின் படி, அதன் தந்தையாக இருக்கலாம் என நம்பப்படும் நபர் போதைப் போருளை உட்கொண்ட போதையில், அந்த அராஜகத்தைச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

அந்தப் பதிவில் அந்த குற்றச் செயல் எங்கு, யாரால் நடத்தபட்டது என்பது தெரிவிக்கப் படவில்லை. அந்த நபர் எந்த இடத்தில் உள்ளார் என்றும் தெரிவிக்கப் படவில்லை. மேலும், அது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டதா என்பது பற்றியும் தெரியவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker