Latestமலேசியா

ஙாவைப் பற்றி அவதூறு: நஜிப் விசாரிக்கப் படுவார்

கோலாலம்பூர், அக். 9 – ஜசெகவின் ஙா கொர் மிங்கின் மீது அவதூறான செய்தியைப் பல முறை நஜிப் ரசாக் தமது முகநூலில் பதிவேற்றியது பற்றி, அவர் புக்கிட் அமான் போலீசாரால் விசாரிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

அவரிடமிருந்து வாக்குமூலம் விரைவில் பெறப்படும் என துணை ஆணையர் மியோர் ஃபாரிலட்ராஸ் வாஹிட் தெரிவித்தார்.

இன்று, மக்களை சபாநாயகருமான ஙா கோர் மிங், இரண்டு மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மேற்கண்ட செய்தி வெளியிடப்பட்டது.

சிலாங்கூர் மாநிலச் சாலைகளின் பெயரை மலாய், சீன மொழிகளில் இருந்ததை மாற்றி, மலாய் மொழியில் மட்டுமே வைக்க வேண்டுமென சுல்தான் உத்தரவிட்டதை எதிர்த்து, சீன சமூகம் சிலாங்கூர் அரண்மனைக்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டுமென அவர் அறைகூவல் விடுத்ததாக நஜிப் தமது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

அது பொய்யான செய்தி என்றும் தம்மீது களங்கம் சுமத்தவே வெளியிடப்பட்டதாகக் கூறி, நஜிப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஙா போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker