Latestமலேசியா

சாலை விபத்தில் சிக்கிய போலீஸ்காரர் – மரணம்

கூலிம், அக். 9 – கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த ரோந்து மோட்டார் சைக்கிள் பிரிவுப் போலீஸ்காரர் ஒருவர் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் 27 வயது முகமட் சாரித் மாட் ரிசான் ஜாலான் கிள்ளான் லாமாவிலிருந்து கூலிம் நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல், எதிரே வந்த வேனை மோதியதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். வேன் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker