Latestமலேசியா

சாலை விபத்தில் போலீஸ் அதிகாரி மரணம்

கூலிம், அக்.9 – கூலிம் கம்போங்
துசூனில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ரோந்து
பிரிவு (யுஆர்பி) போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.இச்சம்பவம் நேற்று மாலை 4.51
மணியளவில் நிகழ்ந்துள்ளது. லென்ஸ் கோப்பரல் முகமட் சாரித் மாட் ரிசான், வயது 27 என அடையாளம் காணப்பட்ட அந்த போலீஸ்
அதிகாரி விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு
சம்பவம் இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்
பணிபுரியும் முகமட் சாரித், அன்றைய தினம் கெளாங் லாமாவிலிருந்து கூலிமிற்கு சென்று
கொண்டிருந்தார். அப்போது வலது பக்க சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஓட்டுனர் எண்ணெய்
நிலையத்திற்கு செல்வதற்காக எதிர்புற சாலையில் வளைந்த போது, சாரித் ஓட்டி வந்த மோட்டர்
வண்டியை இடித்து விபத்துக்குள்ளானது என கூலிம் மாவட்ட தலைமை அதிகாரி முகம்ட் யூசோவ்
தெரிவித்தார். வேன் ஓடுனர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்.

அவரின் உடல்
பிரேத பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என அவர் கூறினார்.
இச்சம்பவம்  சாலை
போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு
வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker