Latestமலேசியா

தனிக் கட்சி தொடங்குவதற்கு அஸ்மின் திட்டமிட்டார் – சைட் உசேய்ன்‌ அலி

கோலாலம்பூர், அக் 9 – டத்தோஸ்ரீ  அன்வாருடன்‌ ஏற்பட்ட தகராறு  கடுமையானதை தொடர்ந்து தனிக்கட்சி அமைப்பதற்கு  பி.கே.ஆர்‌ துணைத் தலைவர்  அஸ்மின் அலி திட்டமிட்டதாக பிகேஆர் கட்சியை கூட்டாக தோற்றுவித்தவர்கள் ஒருவரான  சைட் உசேய்ன் அலி தெரிவித்தார்.

அஸ்மின் அலியின் 3 திட்டங்களில் புதிய கட்சி தொடங்குவதும்‌‌ ஒன்றாகும்.  ஆனால் இந்த முடிவுக்கு வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சரான  சுராய்டா கமாருடின்  அஸ்மினுக்கு ஆதரவை தெரிவிக்கவில்லை என்றும் சைட்  உசேய்ன் ‌ தெரிவித்தார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை அஸ்மினுக்கு நெருக்கமான  பி.கே.ஆர் தலைவர்கள் மறுத்தனர். புதிய கட்சியை தொடங்குவதற்கு அஸ்மின் தீவிரமாக இருந்து  வந்ததாக பிகேஆர் ஆலோசனை மன்றம் மற்றும் அதன் அரசியல் பிரிவின் உறுப்பினராக இருந்து வரும்  சைட் உசேய்ன் தெரிவித்தார்

தொடக்கத்திலிந்து அஸ்மின் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு மூன்று திட்டங்கள் இருந்தன. அவற்றில் முதலாவதாக  பெர்சத்து கட்சியில் இணைவது. ஆனால் அஸ்மின் அணியில் உள்ள மலாய்க்காரர் அல்லாத தலைவர்களுக்கு பெர்சத்து கட்சியில் இடமில்லை என்பது தெரியும்.

அதன் பிறகு அவர்கள்  கெராக்கான்‌ கட்சியில் இணைவதற்கு  திட்டமிட்டனர். இதற்கான முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர் .
ஆனால் தேசிய முன்னணியுடன் கெராக்கான் கட்சிக்கு அணுக்கமான உறவு இருந்ததால் அக்கட்சியில் இணைவதை அஸ்மின் தரப்பைச் சேர்ந்த சிலர் விரும்பவில்லை .

இந்தப் பேச்சுக்களில் யார் சம்பந்தப்பட்டது என்பது எனக்கு தெரியும் .இந்த விவகாரம் தொடர்பில் அன்வாரை சந்திப்பதற்கும் அஸ்மின் தரப்பின் சில‌ தலைவர்கள் முன்வந்தனர்.
ஆனால் அவர்களை சந்திப்பதற்கு அன்வார் மறுத்துவிட்டார்.

அஸ்மின் அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் கெராக்கான்‌ கட்சியுடன் பேச்சு நடத்தினார்.

மூன்றாவது கட்டமாக சொந்தமாக அரசியல் கட்சியை தொடங்கும்  திட்டமும் அஸ்மின்‌ தரப்புக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் தனிக்கட்சி தொடங்குவதில் அஸ்மின் தீவிரமாக இருந்தார்.

அப்படி அவர் புதிதாக அரசியல் கட்சி அமைத்தால் அதுவே அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கும் என எங்களில் பலர் கூறிக் கொண்டோம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker