Latestஉலகம்

திருமண மோதிரம் வாங்க பணமில்லை – வங்கியை கொள்ளையடித்த மாப்பிள்ளை

ஆஸ்தின் – திருமணத்திற்கான மோதிரம் வாங்க பணமில்லை என்பதால் தனது திருமணத்திற்கு முதல் நாள் வங்கி ஒன்றை கொள்ளையடித்த சம்பவம் அமெரிக்கா டெக்சஸில்  நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஹீட் எட்வார்ட் எனும் அந்த மாப்பிள்ளை சிட்டிசன் ஸ்டேட் பேங்கை காலை 11.30 மணியளவில் வங்கி மேலாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி இந்த கொள்ளைச் செயலை செய்துள்ளான்.
கொள்ளையடிப்பதற்கு முன்பாக, தனக்கு நாளை திருமணம் என்றும் மோதிரம் வாங்க பணம் வேண்டும் என்றும் அந்த மேலாளரிடம் கூறியுள்ளான் அந்தக் கொள்ளையன்.

அவனது முகம் சிசிடிவி காமிராவில் பதிவானதை தொடர்ந்து, அவனை சரணடையும்படி அவனது காதலி சமாதானப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவனும் போலிசில் சரணடைந்துள்ளான்.

விசாரணையின் போது அந்த ஆடவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவித்த போலிசார் அவனது காரில் கொள்ளையடிக்கப்பட்ட பணமும் துப்பாக்கி ஒன்றையும் கண்டதாகவும் கூறினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker