Latestசினிமா

தீபாவளிக்கு ஒரே நாளில் மோதும் 3 திரைப்படங்களா?

சென்னை, அக் 9-  இவ்வருட தீபாவளி திருநாளுக்கு மூன்று திரைப்படங்கள் போட்டியிட போவது உறுதியாகிவிட்டது. விஜய் நடிக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிக்கும் ‘கைதி’ மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் தீபாவளி ரிலிசாகா அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட தீபாவளி அக்டோபர் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால், அதற்கு முந்தைய நாள் படத்தை வெளியிட்டால் வசூல் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. பிகில் திரைப்படம் அக்டோபர் 24ஆம் திகதி வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில் மற்ற இரண்டு படங்களும் 25ஆம் திகதி வெளியாகும் என்ற சாத்தியம் வலுப்பெற்றுள்ளது.

ஆனால், பிகில் திரைப்படத்தைத் திரையிடவே தியேட்டர் உரிமையாளர் ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிகின்றது.

இதனால் எப்போது எந்த திரைப்படம் வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடையே வலுத்துள்ளது. அதே சமயத்தில் எந்த திரைப்படத்திற்கு வசூல் அதிகமாக கிடைக்கப் போகிறதோ என்ற ஆர்வமும் சினிமா வட்டாரத்தில் நிலவி வருகிறது.

எது எப்படி இருப்பினும், பிகில், கைதி, சங்கத்தமிழன் என மக்களுக்கு இவ்வருட தீபாவளி செம ஜாலியாக அமையப்போகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker