Latestமலேசியா

நாளை முதல்  உத்துசான்‌ பத்திரிக்கை மூடப்படுகிறது

கோலாலம்பூர், அக் 9 – 80 ஆண்டுகால  வரலாற்றைக் கொண்ட  உத்துசான் மலேசியா  பத்திரிகையின் வெளியீடு இன்றுடன் ஒரு முடிவுக்கு வருவதாக   உத்துசான் மெலாயு  பெர்ஹாட்டின் நிர்வாகத் தலைவர் அப்துல் அஜிஸ் ஷேய்க் பாட்ஷீர்  உறுதிப்படுத்தினார்.

பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களின் வேலையும் இன்றோடு முடிவுக்கு வருவதாகவும் அவர்களது சேவை அக்டோபர் 31ம் தேதியோடு நிறுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 500 பேருக்கு வேலை நீக்க நோட்டீஸ் இன்று வழங்கப்பட்டது.  கடந்த 80 ஆண்டு காலமாக செயல்பட்ட  உத்துசான் மெலாயு நிறுவனம்  அண்மைய காலமாக கடுமையான  நிதி‌ நெருக்கடிக்கு உள்ளானதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 மே மாதத்திற்கு பின்னர் அந்த நிறுவனத்தின் நிலைமை மேலும் மோசமாகியதாக  அப்துல் அஜீஸ் கூறினார்.

உந்துசான் மலேசியா மற்றும்  கோஸ்மோ பத்திரிகைகளின் விற்பனை நாளுக்கு நாள் சரிந்தோடு மாதந்தோறும் 4 லட்சம் வெள்ளியை விளம்பர வருமானமாக பெறும் இலக்கும் தோல்வி கண்டதால் நிறுவனம் மோசமான நிதி நெருக்கடியை  எதிர்நோக்கியதாக அவர் சொன்னார் .

நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் போதுமான மூலதனத்தை பெற முடியவில்லை என்றும் அப்துல் அஸிஸ் கூறினார்..

இதனால் தொழிலாளர்களின் சம்பளத்தை திட்டமிட்ட காலத்தில் வழங்க முடியாமல் போனதோடு அதிகரித்து வரும் கடனையும் அடைக்க முடியாமல் போனதாகவும் அவர் சொன்னார். தற்போது நிறுவனத்துக்கு கடன் கொடுத்தவர்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடைய ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும்  உத்துசான் மற்றும் கோஸ்மோ பத்திரிக்கைகள் வெளிவரலாம் என தகவல்கள் கூறப்பட்டாலும் தொழிலாளர்களுக்கு வழங்கிய கடிதத்தில் இது குறித்து  அப்துல் அஜீஸ்  உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே வி.எஸ்.எஸ் எனப்படும் சுய விருப்பத்தின் பேரில் அந்த நிறுவனத்தின் 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையில் இருந்து விலகிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker