Latestமலேசியா

பாதுகாப்புப் பணம் பறிப்புக் கும்பல்: போலீஸ்காரரும் அடங்குவார்

கோலாலம்பூர், அக். 9 – நேற்று தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் பாதுகாப்புப் பணப் பறிப்பில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நால்வர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட கும்பலில் ஒரு போலீஸ்காரரும் இருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் மஸ்லான் லாஸிம் தெரிவித்தார். குண்டர் கும்பல் போல அது செயல்பட்டு கட்டுமானத் தளத்திற்குப் பாதுகாப்பு அளிக்க பாதுகாப்புப் பணம் கேட்டு மிரட்டியதாக நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அது என்ன கும்பல் என்பதை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக அவர் தெரிவித்தார்.

நாட்டையும் மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் போலீஸ்காரர் அந்தக் குண்டர் கும்பலில் ஈடுபட்டிருந்தது கவலை அளிப்பதாகவும், அவர் மீது இலாகா சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 385இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker