Latestமலேசியா

பூனையின் வயிறு கம்பியால் கட்டப்பட்டு – சித்திரவதை

கோலாலம்பூர், அக். 9 – டேசா பாண்டான் வட்டாரத்தில் பூனை ஒன்றின் வயிறு கம்பியினால் கட்டப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட செயல், சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வட்டார அங்காடிக் கடைக்காரர்கள் அதற்கு உணவை அளித்து வந்திருக்கும் வேளையில், சில வாரங்களாக அது காணாமல் போய், பின்னர் திரும்பி வந்தது.

ஆனால், அதன் வயிறு கம்பியினால் கட்டப்பட்டு, சுருங்கிய நிலையில் இருந்ததைக் கண்ட பொதுமக்கள் பரிதாபப்பட்டு, மலேசிய விலங்குக் கழகத்திடம் புகார் செய்தனர்.

அந்தப் பூனையின் வருகையை விரும்பாத சிலர்தான் அதனை அவ்வாறு கொடுமைப் படுத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

அந்த பூனைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அது முன்பு போல குணமாக சில மாதங்கள் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker