Latestமலேசியா

மலாய்க்காரர் தன்மான மாநாட்டை பருவா என கேலி செய்யவில்லை- அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர், அக். 9 – ஷா ஆலாமில் நடைபெற்ற மலாய்க்காரர்களின் தன்மான மாநாட்டை கேலி செய்து பருவா எனும் சொல்லை தாம் பயன்படுத்தவில்லை என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பாக்காத்தான் தலைவர்களுடன் தாம் உரையாடிய வீடியோ பதிவு வெளியிட்டதை அடுத்து மாருவா எனும் சொல்லுக்குப் பதிலாக அவர் பருவா எனும் அவமரியாதையான சொல்லைப் பயன்படுத்தியதாக பரவலான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அநாகரிமான அரசியல் என வர்ணித்த அவர், மாருவா எனும் சொல்லையே பயன்படுத்தியதாகவும், பருவா எனும் வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றும், தாம் அப்போது துன் மகாதீருடனும் மாட் சாபுவுடனும் உரையாற்றிக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அது பற்றி அமானா தலைவர் மாட் சாபுவிடம் கேட்கப்பட்டபோது, அவர் அன்வார் என்ன சொன்னார் என்பதைத் தாம் கேட்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker