Latestமலேசியா

முடிஞ்சா என்கிட்டயிருந்து திருடிப் பார் ! சவால் விடும் நாய்

அக்.9 – பேரங்காடி ஒன்றிலிருந்து பெண்ணின் கைப்பையை நாய் ஒன்று ஸ்டைலாக தூக்கிக் கொண்டு எஜமானியின் பின்னால் போகும் காணொளி சமூக  வலைத்தளங்களில் பரவி நெட்சன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ரோட் வெலர்’ வகையைச் சேர்ந்த அந்த நாய் பேரங்காடியின் நுழைவாயிலிருந்து அழகாகவும் கம்பீரத்துடனும் கைப்பையைத் தூக்கி வரும் காட்சி, “வந்துபார், நீ தான் தைரியமான ஆளாச்சே. முடிஞ்சா இப்ப வந்து திருடிப் பார்” என்று திருடர்களுக்கு சவால் விடுவது போல அமைந்துள்ளது.

இக்காணொளி எங்கு, எப்போது நடந்தது என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. இது உண்மையிலேயே இயல்பாக நடந்த சம்பவமா அல்லது வேண்டும் என்றே செய்யப்பட்ட காணொளிப் பதிவா என்ற விவரமும் தெரியவில்லை. அருகில் இருக்கும் வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் காணொளியில் பதிவாகியுள்ள குரல் ஆகியவை இச்சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது போல இருக்கின்றது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker