Latestமலேசியா

மோகனம்பாள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை – போலிஸ்

ஷா ஆலாம்‌‌, அக்  9 – ரவாங், பத்து ஆராங்கில் கடந்த மாதம் ஒரு காரில் இருந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது அக்காரில் இருந்ததாக கூறப்படும் மோகனாம்பாள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர் .

அந்தச் சம்பவத்தில் இதர இருவருடன்  சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை பிரஜையான ஜனர்தனன் என்பவரின் மனைவியான மோகனாம்பாள் கோவிந்தசாமி குறித்த தகவல்களை அளிக்க முன் வரும்படி பொதுமக்களிடம் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும் ‌ இதுவரை தங்களுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என சிலாங்கூர் போலீஸ் தலைவர் நோர் அஷாம் ஜமாலுடின்  தெரிவித்தார்.

இன்று ஷா அலாமில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  அவர் இத்தகவலை வெளியிட்டார்.இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மூவருடன் மோகனாம்பாள் வெளியேறும் ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காணோளியையும் போலீசார் பெற்றதாகவும் போர் அஷாம் தெரிவித்தார்.

அந்த  காணோளியை. மோகனம்பாள்‌  குடும்ப வழக்கறிஞர் உதயகுமார்  வெளியிட்டிருந்தார்.

செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று இரவு மணி 10.33 அளவில்  கெப்போங் தெ  ஹென்ஜ்   அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் மோகனாம்பாள் வெளியேறும் ஆதாரத்தை கொண்ட வீடியோவை உதயகுமார் வெளியிட்டிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்படுவதற்கு முன் அவர்களுடன் மோகனம்பாள் இருந்ததற்கான ஆதாரத்தை இந்த காணொளி காட்டுவதாகவும்  வழக்கறிஞரை உதயகுமார் கூறியிருந்தார். இந்த சம்பவத்தில் பெண்மணி ஒருவர் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டதை இதற்கு முன் போலீசார் மறுத்திருந் தனர்.

செப்டம்பர் 14ஆம் தேதி விடியற்காலை வேளையில் பன்டார் கண்ட்ரி ஹோம்ஸ்சில். மூன்று ஆடவர்கள் சென்ற காரை நிறுத்தும்படி   போலீசார் உத்தரவு பிறப்பித்தும் அதனை அவர்கள் புறக்கணித்ததால் சுமார் 7 கிலோமீட்டர் தூரம்  விரட்டி சென்றதாகவும் அப்போது போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில்.காரில் இருந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் கூறியிருந்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் தவச்செல்வம் கோவிந்தசாமி மற்றும் மகேந்திரன் சந்திரசேகரன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜனார்தனன் விசா காலவதியாகிய பிறகும்  இங்கு இருந்தவர் என போலீசார்தெரிவித்தனர்.

மோகனாம்பாள் மற்றும் தவ செல்வம்  ஆகியோரின் ஆகியோரின் தந்தையான கோவிந்தசாமி போலீசாரின் இந்த இந்த விளக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். . சம்பவம் நடந்தபோது அந்த மூவருடன் தனது மகளும் இருந்ததாக அவர் கூறியிருந்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker