Latestமலேசியா

1எம்டிபியின் பணத்தைக் கையாடவில்லை – நஸிர் ரசாக்

கோலாலம்பூர், அக். 9 – தமது சிஐஎம்பி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட 1எம்டிபிக்குச் சொந்தமான 26.7 மில்லியன் ரிங்கிட்டில், தாம் எதனையும் கையாடல் செய்யவில்லை என நஜிப் ரசாக்கின் இளைய சகோதரர் நஸிர் ரசாக் தெரிவித்துள்ளார்.

நஜிப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்தப் பணத்தைத் தமது வங்கிக் கணக்கில் வரவுவைத்த பின்னர், அதனை நஜிப்பின் பிரதிநிதிகளுக்கு ரொக்கமாகக் கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை விசாரிக்கவில்லை என்றும் அது 13ஆவது பொதுத்தேர்தலுக்காகப் பெறப்பட்ட நன்கொடை என தாம் நம்பியதாக அவர் குறிப்பிட்டார்.

1எம்டிபியின் 420 மில்லியன் பணம் 80 தனிப்பட்டோருக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதனை திரும்பப்பெற ஊழல் தடுப்பு ஆணையம் சம்பந்தப்பட்டோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தைப் பெற்றோரில் நஸிர் ரசாக்கும் ஒருவராவார்.

ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இணைந்து அந்த 25.7 மில்லியனை எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker