Latestமலேசியா

1எம்டிபி – நஜீப்‌பிற்கு ஜோ லோ தொடர்பு பாலமாக இருந்தார்

கோலாலம்பூர், அக் 9 – 1எம்டிபியின்  தலைமை செயல் அதிகாரி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் ஆகியோருக்கு  ஜோ லோ தொடர்பு பாலமாக இருந்தார் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சாட்சியமளித்த போது  1எம்டிபி யின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான  டத்தோ ஷாரோல் அஸ்ரால்  இப்ராஹிம் ஹல்மி தெரிவித்தார்.

அதே வேளையில்  மலேசியாவால் தேடப்பட்டு வரும்  ஜோ லோ 1எம்.டி.பி.யின் சிறப்பு ஆலோசகராகவோ அல்லது  அந்த நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் எதிலும் இல்லை என்றும் ஷாரோல் தெரிவித்தார்.

இதற்கு முன் விசாரணையின்போது‌‌ ஜோ லோ திரெங்கானு முதலீட்டு வாரியத்தின் ஆலோசகர் என்றும் பிறகு அவர் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 1எம்டிபி யில் இணைந்தார் என்றும் கூறப்பட்டது.

முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு விசாரணையின் 19வது நாளான இன்று நஜீப்பின்  வழக்கறிஞர்  முகமட்   ஷாபி அப்துல்லாவின் குறுக்கு விசாரணையின்போது அரசு தரப்பின்  9ஆவது சாட்சியான ‌‌‌‌ ஷாரோல் சாட்சியம் அளித்தார்.

1எம்.டி.யில்   முக்கிய பதவி எதுவும்  ஜோ லோவூக்கு கிடையாது. அவர் எனக்கும்1எம்.டி.பி மற்றும் அதன் ஒரே பங்குதாரரான  நஜீப்பிற்குமிடையை‌ தொடர்பாளராக மட்டுமே இருந்தார் .

1எம்டிபியின்  230 கோடி  வெள்ளி நிதி முறைகேட்டில் சம்பந்தப்பட்டதாக முன்னாள் நிதி அமைச்சருமான 64  வயதுடைய  நஜீப்  4 குற்றச்சாட்டுக்களையும்  சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான இதர 21 குற்றச்சாட்டுக்களையும் எதிர்நோக்கியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி கோலின்‌ லோரன்ஸ்  சேகுரா  முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை தொடரும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker