Latestமலேசியா

மலாயாப் பல்கலைக்கழகத்தின் 59ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று தொடங்கியது !

கோலாலம்பூர், அக் 12 – மலாயாப் பல்கலைக்கழகத்தின் 59ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று தொடக்கம் கண்டது.

பட்டம் பெறும் பட்டதாரிகள் அறிவுடன் சேர்த்து அதிகாரத்தையும் பெறுகிறார்கள். அதிகாரம் கையில் இருக்கும் போது அதை தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது. ஊழல் மற்றும் பாகுபாடு போன்ற எண்ணங்கள் இல்லாமல் நன்வழியில் அதை பயன்படுத்த வேண்டும் என மலாயாப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா தெரிவித்தார்.

59 ஆண்டுகளுக்கு முன்னர், மலாயாப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவின் போது 400க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மட்டுமே பட்டம் பெற்றனர்.

ஆனால் இப்போது வருடத்திற்கு 6000ற்கும் அதிகமானோர் பட்டம் பெறுகின்றனர் என நஸ்ரின் ஷா தனது உரையின் போது குறிப்பிட்டார்.

இன்றைய முதல் நாள் பட்டமளிப்பு விழாவில் முதல் அங்கமாக சுமார் 400க்கும் அதிகமான முனைவர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் பட்டம் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மதியம் முதுகலைப் பட்டப்படிப்பிற்கான பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

அதன் பின்னர் அதிகமான மாணவர்களை கொண்ட இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நாளை தொடங்கவுள்ளது.

இன்று தொடங்கிய பட்டமளிப்பு விழா அக்டோபர் 16ஆம் திகதி வரையில் நடைப்பெறவுள்ளது

முன்பெல்லாம் நமது குடும்பத்திலிருந்து ஒருவர் பல்கலைக்கழகம் செல்வதே அபூர்வமான ஒன்றாக இருந்தது.

அதன் பின்னர் கல்வி பயில்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி என்ற தாரக மந்திரம் அனைத்து இந்திய குடும்பங்களிலும் ஊடுறுவி தோட்டபுறத்து குடும்பங்களிலிருந்து பல இந்திய  பட்டதாரிகள் உருவாகினர்.

அது காலப்போக்கில் கல்வி பயின்ற சமுதாயமே வாழ்வில் மேன்மையடையும் என்பதை உணர்ந்து அனைத்து குடும்பங்களிலும் நிறைய பட்டதாரிகள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டபடிப்பு வரை பெறுவது பெருமையையும் மகிழச்சியையும் அளிக்கிறது.

பட்டம்பெறும்  அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் !!!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker