Latestமலேசியா

DAP சட்டமன்ற உறுப்பினர்கள் கைது;  அரசியல் காரணம் கிடையாது – ஹமிட்‌ படோர்

கோலாலம்பூர், அக் 12 – தமிழ் ஈழம் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன்  கொண்டிருந்த தொடர்பினால் ஜ.செ.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன் மற்றும் சாமிநாதன் உட்பட எழுவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் சம்பந்தம் எதுவும் கிடையாது என போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட்‌ படோர் ‌கூறினார்.

இவர்கள் மீது போலீஸ் விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் .இந்த விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணியின் தலைவர்கள் அமைதி காக்க வேண்டும் என அப்துல்  ஹமிட் கேட்டுக் கொண்டார்.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு அரசியல்வாதிகள் அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தை நாங்கள் தேசிய பாதுகாப்பு ரீதியில்‌ பார்க்கிறோம் ‌. அரசியல், இனம் மற்றும் சமய விவகாரத்திற்கும் அந்த இருவர் கைது செய்யப்பட்டதற்கும்  எந்த ஒரு தொடர்பும் இல்லை என அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் வழக்கறிஞரை நியமிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அவர்கள் தடுப்புக் காவலில் இருக்கும்போது அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாக எவரும் கூறுவதை தாம் விரும்பவில்லை என்றும் அப்துல் ஹமிட் கூறினார்.

ஜ.செ.கவின்  சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன் மற்றும் குணசேகரன் உட்பட ஐவர் சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து வினவப்பட்டபோது அவர் ‌இதனை தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்கும்படி மக்கள் கூட்டணியின்‌  இந்திய தலைவர்கள் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

சொஸ்மா சட்டத்தின்கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு முரணாக இருப்பதோடு புதிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் கீழ்  இந்த கைது நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது என்றும் மக்கள் கூட்டணியில் இந்திய தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தனர்.

மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோருக்கு சட்ட உதவி வழங்குவதற்காக வழக்கறிஞர்ராம் கர்பால் சிங், வழக்கறிஞர்ஆர்,எஸ்.என்.ராயர் ஆகியோரை‌ கட்சி நியமித்திருப்பதாகவும்  லிம் குவான்.எங் தெரிவித்தார்.

இதனிடையே மலேசியா சட்டத்தின்கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னமும் பயங்கரவாத அமைப்பு என கருதப்படுவதாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவரான  அயுப் கான்  தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker