Latestமலேசியா

குண்டர் கும்பலின் டத்தோ விருது பெற்ற நபர்: கைது

கோலாலம்பூர், அக். 13 – கும்பர் கும்பல் 24இல் ஈடுபட்டிருந்த டத்தோ விருது பெற்ற நபர் ஜோகூர்,கூலாயில் கைது செய்யப்பட்டார்.

52 வயதுடைய அந்த நபர் தாம் குண்டர் கும்பலில் ஈடு பட்டதையும் தம்மைப் பற்றிய வீடியோ பதிவை ஒப்புக் கொண்தாகவும் குற்றவியல் புலனாய்வுத் தலைவர் ஹுஸிர் முகமட் தெரிவித்தார்.

தம்மைக் கைது செய்ய சிங்கப்பூரில் உள்ளவர்கள் உட்பட யாருக்கும் துணிவில்லை என அந்த நபர் சவால் விட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டதாகவும் குற்றவியல் சட்டம் பிரிவு 506இன் கீழும் தகவல், பல்லூடகச் சட்டம் பிரிவு 233இன் கீழும் அந்த நபர் மீது விசாரணை செய்யப்படும்.

விசாரணைக்குப் பின்னர், அந்த நபர் இன்று விடுவிக்கப் படுவார் என்றும் அந்த நபருக்கு சிலாங்கூரில் குற்றப்பதிவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker