Latestமலேசியா

மலாக்கா ஜசெகவின் மேலும் இருவர்- கைது

பெட்டாலிங் ஜெயா, அக். 13 – ஈழ விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில், மலாக்கா ஜசெக வின் மேலும் இரு உறுப்பினர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பினாங்கில் இருவரும் சிலாங்கூரில் ஒருவரும் சொஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநில அரசின் நிறுவனம் ஒன்றின் தலைமை செயல்முறை அதிகாரியும் ஊராட்சி மன்ற கவுன்சிலருமான நபர் அதில் அடங்குவார் மாநில ஜசெக தலைவர் தே கோக் கியூ தெரிவித்தார்.

அவர்கள் இருவரும் டுரியான் துங்கால், அலோர் காஜாவிலும் நேற்று காலை 10 மணியளவில் கைது செய்யப்பட்டனர். மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

வியாழக்கிழமையன்று, மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினரும் காடெக் சட்டமன்ற ஊறுப்பினருமான ஜி.சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா உறுப்பினர் பி.குண்சேகரனும் கைது செய்யப்பட்டனர்.

ஜசெகவின் உதவித் தலைவர் எம்.குலசேகரன் நேற்று சாமிநாதன் மற்றும் குணசேகரன் ஆகியோரின் குடும்பத்தாரைக் கண்டு ஆறுதல் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker