Latestமலேசியா

விடுதலைப் புலிகளுக்கு இரக்கம் காட்டுவது – குற்றமாகாது- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், அக். 13 – ஈழப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ள இரு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஐந்து நபர்கள் துல்லியமாக, நேர்மையாக விசாரணை செய்யப்பட வேண்டுமென மஇகவின் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும்.

அந்தக் குற்றச்சாட்டுக்குத் தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே, சொஸ்மா சட்டத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.

ஈழப் போரில் 200,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டு, ஆயிரக் கணக்கானோர் அடைத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வதைக்கப்பட்டனர். உலகெங்கிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அதற்கு அனுதாபம் காட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லர்.

அனுதாபம் காட்டப்படுவதால் அவர்கள் தீவிரவாதிகள் என கருதப்படக் கூடாது. மேலும் 2017ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் விடுதலைப் புலி இயக்கத்தை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபம் காட்டுவதால் கைது செய்வது முறையல்ல மாறாக விழுப்புணர்ச்சியே சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.

இப்போதைய காலக்கட்டத்தில், சமயத்தின் பெயரால் வெளிநாட்டுப் பயங்கரவாதி களோடு இணைந்து போரிட்ட பின்னர், நாட்டுக்கு வரும் அம்மாதிரியானோரை வரவேற்று ஆதரவு தெரிவிப்பது நாட்டில் நடப்பதுதான் என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

அதனைப் போன்றே விடுதலைப் புலிகளோடு தொடர்பில் இருந்தோர் நடத்தப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker