Latestமலேசியா

ஹீலியம் பலூன்கள் வெடிப்பு: 16 பேர் காயம்

புத்ரா ஜெயா, அக். 13 – புத்ரா ஜெயா நிகழ்ச்சி ஒன்றில் பறக்க விடப்பட்ட ஹீலியம் பலூன்கள் வெடுத்து, 16 பேர் காயமடைந்தனர்.

தேசிய விளையாட்டு மாதத்தை ஒட்டி கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட தேகப் பயிற்சி நிகழ்ச்சியில் இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும் அதில் 9 பிள்ளைகளும் 7 பார்வையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

4லிருந்து 30 வயது வரைக்குமான அவர்கள்
புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலூன்களோடு இணைக்கப்பட்ட கயிறை யாரோ ஒருவர் சிகரெட் லைட்டரால் தீயிட்டு அறுக்க முனைந்தபோது, அதன் பொறி பலூன் ஒன்றில் பட்டு, மற்ற பலூன்களுக்கும் பரவி வெடித்ததாக புத்ரா ஜெயா மாவட்ட ஏசிபி ரொஸ்லி ஹசான் தெரிவித்தார்.

அது சம்பந்தமாக யாரும் முன் வந்து போலீஸ் புகார் செய்யவிலை, யாரும் கைது செய்யப்படவுமில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் கடுமையான காயத்துக்கு ஆளாகவில்லை. இதனிடையே புத்ரா ஜெயா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், மருத்துவமனைக்குச் சென்று காயமுற்றோரைக் கண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker