பக்காத்தான் தலைமைத்துவத்தில் யாரும் ஓரங்கட்டப்படவில்லை- மகாதீர்

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜூலை.14- பக்காத்தான் கூட்டணியின் தலைமைத்துவத்தில் யாரும் ஓரங்கட்டப்படவில்லை, மாறாக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாகவும் சம அந்தஸ்திலும் இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இன்று காலையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைமைத்துவ கட்டமைப்பு அறிவிக்கப்பட்டது. அதில் கூட்டணியின் அவைத் தலைவராக டாக்டர் மகாதீரும் மற்றொரு தலைவராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பக்காத்தான் கூட்டணியின் தலைவராக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கூட்டணியில் ஜசெக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் இருக்க, முக்கியமான பதவிகளுக்கு ஏன் ஜசெக தேர்ந்தெடுக்கப்படவில்லை என டத்தோஶ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மகாதீர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், முக்கிய பதவிகளுக்கான தேர்ந்தெடுப்பு ஏகமனதாக எடுக்கப்பட்டதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு "முடிவுகளை எப்போதும் ஏகமனதாக எடுக்க முடியாது. சில நேரம் பெரும்பான்மை கொண்டு தான் முடிவுகள் எடுக்கப்படும். நேற்றைய முடிவும் அவ்வாறு எடுக்கப்பட்டது தான்" என அவர் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS