விரைவில் பொதுத் தேர்தல் அறிகுறி காட்டும் சுற்றறிக்கை

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜூலை 16-தேர்தல் ஆணையம் நடத்தவிருக்கும் விளக்கக் கூட்டத்தில் தனது ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் சுற்றறிக்கையை சிலாங்கூரில் உள்ள பள்ளி ஒன்று அனுப்பி இருப்பதானது, அடுத்த பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கப் போகிறது என்ற பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த திங்கள்கிழமை இந்த விளக்கக் கூட்டம் தொடங்கவிருப்பதாக பண்டாமாரான் ஜெயா சமய ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தங்களுடைய பள்ளி தேர்தல் வாக்குச் சாவடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது, எனவே ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் நடத்தவிருக்கும் விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று பெற்றோர்களுக்கு அறிவிக்கும் சுற்றறிக்கையை பள்ளி நிர்வாகம் அனுப்பியுள்ளது. திங்கள் மற்றும் செவ்வாயில் இந்த விளக்கம் கூட்டம் நடைபெறவிருப்பதாக பள்ளி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பள்ளி பணியாளர் உறுதிப்படுத்தினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS