மலேசியாவில் இப்போது சர்வதிகாரம் இல்லை! - நஜிப்

அரசியல்
Typography

வாஷிங்டன், செப்.14- முன்னாள் பிரதமரும், இப்போது எதிர்க் கட்சித் தலைவராக மாறி இருப்பவருமான ஒருவருடைய ஆட்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் உள்நாட்டில் பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், தம்முடைய ஆட்சியில் மலேசியாவின் ஜனநாயகம் உயிர்ப்புடன் விளங்குகிறது என்று டத்தோஶ்ரீ  நஜீப் தெரிவித்தார்.

சர்வதிகாரத்தின் பிடிக்குள் சிக்கிவிடும் அபாயத்தில் மலேசியா இல்லை. மலேசியாவைப் பற்றி தவறான தோற்றம் பரப்பப்படுவது உண்மையில் அபத்தமான ஒன்று என அமெரிக்காவின் கல்வியாளர்கள் கூட்டத்தில் பேசிய போது பிரதமர் நஜிப் சுட்டிக் காட்டினார். 

"எனது தலைமைத்துவத்தில் மலேசியாவின் ஜனநாயகம் செழிப்புடன் நிலைத்து நிற்கிறது. சொல்லப் போனால், முன்பை விட கூடுதலான வலுவுடன் திகழ்கிறது என்றார் அவர்.

முன்னாள் பிரதமர் ஒருவர் அவரது ஆட்சிக் காலத்தில் சர்வதிகாரியாக திகழ்ந்தார் என்பதை மலேசியா எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளன. நூற்றுக் கணக்கானோரை 'இசா' சட்டத்தில் சிறையில் தள்ளினார். பத்திரிக்கைகளை மூடினார்.

நீதித்துறையின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. வேண்டியவர் சம்பாதிக்கும் நிலை இருந்தது. அன்றைக்குச் செயல்பட்ட ஒப்பந்தங்கள் சில இன்று வரைக்கும் கூட சாமன்ய மலேசியர்களுக்கும் பெரும் சுமையாக விளங்கி வருகின்றன என்று பிரதமர் நஜிப் சாடினார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS