தொகுதிகள் ஒதுக்கீடு: இறுதிக் கட்டத்தில்! பிரச்சனைகள் இல்லை என்கிறது மசீச.

அரசியல்
Typography

 

மலாக்கா, அக்.22- பொதுத்தேர்தலை முன்னிட்டு தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிகள் ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள், தேசிய முன்னணிக்குள்ளேயே மேற்கொள்ளப்படும். அது பற்றி ஊடகங்கள் மூலம் எத்தகைய அறிவிப்புக்களும் செய்யப்பட மாட்டாது என்று மசீச தலைவர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய் கூறினார்.

தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்தின் போது தொகுதிகள் பங்கீடு பற்றி விரிவாக விவாதிக்கப் பட்டதாகவும் எனினும், அது பற்றி பத்திரிகையாளர்களிடம் கருத்துரைக்க தமக்கு அனுமதி இல்லை என்றும் அவர் சொன்னார்.

எதுவானாலும் உள்கட்டமைப்புள்ளேயே விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தி ஊடகங்களில் அதுபற்றி விவாதிக்கப் படமாட்டாது. அனைத்துப் பங்காளிக் கட்சிகளும் இந்தக் கருத்தின் அடிப்படையில் இணக்கம் கண்டுள்ளன என்று மலாக்கா மாநில மசீச மாநாட்டை தொடக்கி வைத்த பின்னர் டத்தோஶ்ரீ லியோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தேசிய முன்னணிக்குள் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பில் எத்தகைய பிரச்சனையும் இல்லை. கிட்டத்தட்ட அவை இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. ஆனால், தேர்தலில் வெற்றியை நிலைநாட்டவேண்டும் என்பதற்காக சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும் இடம்பெறும் என்றார் அவர்.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS