பட்ஜெட் 2018: 'எங்களுக்கு எதுவுமே இல்லையா?' -வாடகைக்கார் ஓட்டுநர்கள் கேள்வி

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், அக்.28- பொதுப் போக்குவரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2018-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும், வாடகைக் கார் ஓட்டுநர்கள், எங்களுக்கு இந்த பட்ஜெட்சில் எந்த ஒதுக்கீடும் இல்லையா? என்று கேளிவி எழுப்பியுள்ளனர்.

பொதுத் தேர்தலில் வாக்குகளை அள்ளும் எண்ணத்தில், சிறுவர்களை ஏமாற்ற மிட்டாய்கள் வழங்கப்படுவது போல், அரசாங்கத்தின் இந்த ஒதுக்கீடும் அமைந்துள்ளதாக மலேசிய டாக்சி உருமாற்றச் சங்கத் தலைவர் கமாருடின் முகமட் ஹுசேன் கருதுகிறார். 

பொதுப் போக்குவரத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள 1 பில்லியன் ரிங்கிட்டில், மேம்பாட்டிற்கான அனைத்து அம்சங்களையும் செயல்படுத்திட முடியுமா? என்பது கேள்விக் குறியே என்று அவர் சொன்னார். 

உபெர் மற்றும் கிராப் வாகனங்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து, வாடகைக் கார் ஓட்டுநர்களில் தொழில் தொய்வடைந்துள்ளதாகவும், வழங்கப்பட்டுள்ள அந்த நிதி ஒதுக்கீடு தங்களுக்கு எவ்வகையில் உதவியாக அமையும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். 

வாடகைக்கார் ஓட்டுநர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தும் பொருட்டு, சில உதவிகளை அரசாங்கம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மலேசிய பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவர் சங்கத்தின் தலைவர் அஜித் ஜோல் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS