டத்தோ டி.மோகன் செனட்டராக பதவியேற்றார்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், நவ.16- ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் இன்று டேவான் நெகாராவில் செனட்டராக பதவியேற்றார். மூன்று ஆண்டுக் காலம் அவர் இப்பதவியை வகிப்பார். 

டேவான் நெகாரா சபாநாயகர் டான்ஶ்ரீ எஸ்.விக்னேஸ்வரன் முன்னிலையில் அவர் இப்பதவியை ஏற்றுக் கொண்டார். 2009-ஆம் ஆண்டிலிருந்து 2013-ஆம் ஆண்டு வரை மஇகா தேசிய இளைஞர் பிரிவின் தலைவராக மோகன் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்றப் பின்னர், பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் தலைமைத்துவத்திற்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் ஆதரவுக்கும் மோகன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 

"நாட்டு மக்களுக்கும் இந்தியச் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கும் முயற்சியில் நான் ஈடுபடுவேன்" என்று அவர் உறுதியாகக் கூறினார். 

இதனிடையே, செனட்டர் டத்தோ ஷாஹானிம் முகமட்டும் இரண்டாவது முறையாக செனட்டராக பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS