சீனப் பெருநாள் முடிந்த கையோடு பொதுத் தேர்தலா? சாஹிட் தகவல் 

அரசியல்
Typography

 

பாகான் டத்தோ, நவ.26-அடுத்த ஆண்டில் சீனப் பெருநாள் கொண்டாட்டம் முடிந்த கையோடு  சில தினங்களுக் உள்ளாகவே நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ சாஹிட் ஹமிடி கோடிகாட்டியுள்ளார்.

ஊத்தாங் மெலிந்தானில் தியோ ஃபு கியோங் கோயிலை திறந்து வைத்த பின்னர் உள்துறை அமைச்சரும் பாகான் டத்தோ தொகுதி எம்.பி.யுமான சாஹிட் மேற்கண்டவாறு  சுட்டிக்காட்டினார்.

நம்முடைய முக்கிய நாள் வரப்போகிறது. சீனப் பெருநாள் முடிந்து,  அந்த நாள் வரவிருக்கிறது. வாக்காளர்கள்  முன்பு தவறு செய்திருந்தால் பரவாயில்லை. மீண்டும் அதே தவறை அவர்கள் இப்போது செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதற்கு மன்னிப்பு இல்லை என்று அவர் சொன்னார்.

சீனப் பெருநாள் பிப்ரவரி 16ஆம் 17ஆம் நாள்களில்  இடம்பெறவுள்ளன. மலேசியா நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் அடுத்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. எனவே, இந்தத் தேதிக்கு 60 நாள்களுக்கு முன்பே தேர்தல் நடத்தப் படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS