போலி பல் மருத்துவர்களின் கொட்டத்தை அடக்க  புதிய சட்டம் தாக்கல்!

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், நவ.29- போலி பல் மருத்துவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வகை செய்ய,  பல் மருத்துவம் மீதான  விதிமுறைகளைக் கொண்ட  புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மலேசிய மருத்துவக் கழகமான எம்.டி.சி.யின் கடமைகள் மற்றும் அதிகாரங்கள் ஆகியவை தொடர்பான புதிய அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.  தகுதி நிர்ணயம், மற்றும் அங்கீகாரம், பதிவுகளை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது, கட்டணம் விதிப்பது, பதிவுக்கான தேர்வு விதிமுறைகளை சீரமைப்பது ஆகியவை சம்பந்தப்பட்ட எம்.டி.சி.யின் அதிகாரங்களில் இனி மாற்றங்களை இந்த மசோதா கொண்டு வரவிருக்கிறது.

அதேவேளையில், மலேசிய பல் மருத்துவ தெரபிஸ்ட் வாரியம் ஒன்று பதிவு செய்யப்படுவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.  இந்தப் புதிய மசோதா அமலுக்கு வரும் போது எம்.டி.சி. கலைக்கப்பட்டு புதிய வாரியம் அமைவதற்கு வழி ஏற்படுத்தப்படும்.

பல் மருத்துவம் தொடர்பான குற்றங்களுக்கு பல்வேறு கடுமையான அபராதங்களையும் தண்டனைகளையும் விதிப்பதற்கும் போலி பல் மருத்துவர்களைச் சமாளிப்பதற்கும் இந்த புதிய மசோதாவில் பல சட்டக் கூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்படாதவர்கள், பல் மருத்துவர்களாக செயல்படுவது மற்றும் பல் மருத்துவர் போல நடந்து கொள்வது ஆகிய குற்றங்களைப் புரிந்தால் ஒவ்வொரு குற்றத்திற்கும்  கூடுதல் பட்சமாக 3 லட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் அல்லது 6 ஆண்டுகளுக்கும் மேற்போகாத வகையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் அல்லது இரண்டு தண்டனைகளையுமே விதிக்கப்படும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS