எதிர்க்கட்சிகள் வென்றால், பிரதமர்  யார்? ஜசெகவின் தேர்வு அன்வார்தான்!

அரசியல்
Typography

 

புத்ராஜெயா, டிசம்.7- கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் எதிர்க்கட்சி கூட்டணி கைப்பற்றுமேயானால், பிரதமர் பதவிக்கான முதல்நிலை வேட்பாளராக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமை ஜசெக கருதும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

எனினும் அதேவேளையில் இடைக்கால பிரதமராகவும் துணைப் பிரதமராகவும் துன் மகாதீர் மற்றும் டத்தோஶ்ரீ டாக்டர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் கருதப்படுவார்களா? என்று கேட்கப்பட்ட போது அது குறித்து கருத்துரைக்க அந்தோனி லோக் மறுத்து விட்டார்.

இப்படியெல்லாம் பல தகவல்கள் ஊடகங்களில் வலம் வருகின்றன. அது பற்றி கருத்துரைக்க நான் விரும்பவில்லை. ஜசெகவைப் பொறுத்தவரை பிரதமர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு அன்வார் இப்ராகிம் தான் என்று அவர் சொன்னார்.

இந்தப் பொதுத்தேர்தலுக்குப் பின்னர் (பக்காத்தான் ஹராப்பான் வென்றாலும் கூட) அவர் பிரதமராக முடியாது என்பது எங்களுக்குத்தெரியும். அவருக்கு அரச மன்னிப்புக் கிடைத்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றால் தான் அவர் பிரதமராக முடியும் அன்று அந்தோனி லோக் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS