அமெரிக்க தூகரகம் முன் நாளை பாஸ் -அம்னோ ஆட்சேப மறியல்!

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், டிசம்.7- இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவைக் கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை கோலாலம்பூரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் பாஸ் கட்சி நடத்தும் ஆட்சேப மறியல் கூட்டத்தில் அம்னோவும் கலந்து கொள்ளும் என்று டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

தற்போது அம்னோ பொதுப்பேரவை கூட்டம் நடந்து வருவதால், இடைவிட்டுப் போவதைத் தவிர்க்க பெரிய அளவில் அம்னோவினர் இந்த மறியலில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.

அதேவேளையில் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தும் வகையில் இதர அரசியல் கட்சிகளுடனும் அரசுசாரா அமைப்புக்களுடனும் அம்னோ பேச்சு நடத்தும் என்று அவர் கூறினார்.

மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நம்முடைய ஒருமைப்பட்டை காட்டும் நோக்கத்தில் இந்த மறியல் அமையும் என்றார் அவர்.

டெல் அவிவிற்கு பதிலாக ஜெருசலத்தைத் தலைநகராக்கும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையினால் மத்திய கிழக்கில் சண்டைகளும் தீவிரவாதமும் தலைதூக்கும் என்ற அச்சம் நிலவுவதாக துணைப் பிரதமர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS