கேமரன்மலை வேட்பாளர் யார்? பிரதமரே முடிவு செய்வார்! –டான்ஶ்ரீ கேவியஸ் 

அரசியல்
Typography

 

கேமரன் மலை, டிச.11- எதிர்வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில், கேமரன் மலைத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கப் போவது யார் என்பதை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கே முடிவு செய்வார் என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ  எம்.கேவியஸ் கூறினார்.  

அத்தொகுதியில் தேசிய முன்னணி வெற்றிபெறும் பொருட்டு, யாரை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பது குறித்து பிரதமர் நன்கு அறிந்திருப்பார் என்று தாம் நம்புவதாக கேவியஸ் கூறினார். 

"இது குறித்து நான் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்ரமணியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், அத்தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மஇகா வேட்பாளரே போட்டியிட்டு வருகிறார் என்பதால், அத்தொகுதியை மைபிபிபிக்கு விட்டுத் தரும்படி நான் அவரை கட்டாயப் படுத்த முடியாது என்றார் அவர்.

அதன் அடிப்படையில், அத்தொகுதி குறித்து முடிவெடுக்கும் உரிமையை பிரதமரிடமே நான் விட்டு விட்டேன்" என்று அவர் கருத்து தெரிவித்தார். 

"தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே நட்பு வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில், நாங்கள் இந்த முடிவினை எடுத்துள்ளோம். அதே வேளையில், மைபிபிபி தான் கேமரன் மலையில் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினால், அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மஇகாவிற்கு இருத்தல் அவசியம்" என்று அவர் கேட்டுக் கொண்டார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS