எம்.எச்.-17 விமானம்; ரஷ்ய வீரரை கைது  செய்ய உக்ரேய்ன் நீதிமன்றம் உத்தரவு!

அரசியல்
Typography

கோலாலம்பூர், டிசம்.13- கடந்த 2014 ஆம் ஆண்டில் மலேசிய ஏர் லைன்ஸ் விமானமான எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த நபரை கைது செய்யும்படி உக்ரேய்ன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ரஷ்யாவுக்கு சொந்தமான 'பக்' ரக ஏவுகணையைப் பாய்ச்சக்கூடிய சாதனத்தை உக்ரேய்னுக்குள் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தவர்  ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த செர்ஜி டபின்ஸ்கி என்ற நபர் என்பதால அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த ஏவுகணை பாய்ச்சும் சாதனத்தை எங்கே எடுத்துச் செல்லவேண்டும் என்பதை ரஷ்ய வீரர்களுக்கு தொலைபேசியில் டபின்ஸ்கி உத்தரவிட்ட உரையாடலை உக்ரேய்ன் உளவுத்துறை பதிவு செய்திருக்கிறது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எச்.-17 பயணிகள் விமான கிழக்கு உக்ரேய்னிலுள்ள டோன்ஸ்க் என்ற இடத்தில் ரஷ்யாவின் பக் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பயணிகளும் கொல்லப்பட்டனர். எனினும், ரஷ்ய இராணுவம் தான் மலேசிய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது என்பதை ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS