'புகீஸ்' விவகாரம்: துன் மகாதீரிடம் போலீஸ்  துருவித் துருவி விசாரணை!

அரசியல்
Typography

புத்ராஜெயா, டிச.13- கடந்த ஜூலை மாதத்தில் நடந்த பேரணி ஒன்றில், புகீஸ் வம்சாவளியினர் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டதன் பேரில், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடம் துருவித் துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இன்று மதியம் 1.40 மணிக்கு, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திலிருந்து பெர்டானா தலைமைத்துவ அறவாரியத்திற்கு வந்த 6 போலீசார், டாக்டர் மகாதீரிடம் அச்சம்பவம் குறித்து வாக்குமூலத்தைப் பெற்றனர். 

போலீசாரின் வருகைக்கு முன்னரே, டாக்டர் மகாதீரின் வழக்கறிஞர், முகமட் கதீரா அப்துல்லா மதியம் 1.05 மணிக்கு அந்த அறவாரியத்திற்கு வருகைத் தந்தார்.   

புகீஸ் வம்சாவளியினரை கடற்கொள்ளையினரோடு ஒப்பிட்டு பேசியது தொடர்பாக, கண்டிப்பாக மகாதீர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபூஸி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து மகாதீருக்கு எதிராக இரண்டு விசாரணை தொடங்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. புகீஸ் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் மகாதீர் பேசியுள்ளார் என்று சிலாங்கூர் சுல்தான் உட்பட பலர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS