தேசிய முன்னணியின் முக்கியத் தலைவர்கள் ஜனவரி 3-ஆம் தேதி சந்திப்பு!

அரசியல்
Typography

கோலாலம்பூர், டிச.27- எதிர்வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில், மீண்டும் வெற்றியை தங்களின் கைவசப்படுத்தும் பொருட்டு, அதற்கான திட்டங்களை சரிவர வகுக்க, தேசிய முன்னணியின் உச்சமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனவரி மாதம் 3-ஆம் தேதி ஒன்று கூடவிருக்கின்றனர் என்று பெரித்தா ஹரியான் நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது. 

தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில், நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில், வெற்றியை தங்களின் வசப்படுத்துவது எப்படி என்பது குறித்து, அந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று அந்தப் பத்திரிக்கை கூறியுள்ளது. 

நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல், 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைப்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், மக்களின் வாக்குகளை வெல்வதற்காக என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும், மற்றும் பாமர மக்களின் வாக்குகளை பெறுவதற்கு, அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படும். 

இதனிடையில், குறிப்பிடப்பட்ட அந்தத் தேதியன்று, தாங்கள் புத்ரா வாணிப மையத்தில் முக்கிய சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்துக் கொள்ளவிருப்பதாகவும், பெரித்தா ஹரியான் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தேசிய முன்னணியின் உச்சமன்ற உறுப்பினர்கள், ஜனவரி 12-ஆம் தேதியன்று தான் சந்திக்கவிருக்கின்றனர் என்று சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

தீபகற்ப மலேசியாவில், தேசிய முன்னணியின் சார்பில், எந்தத் தொகுதியில், எந்தப் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக நியமிப்பது என்பது குறித்து, அந்தச் சந்திப்பில் முடிவெடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. சரவாக் மாநிலத்திலும், தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அச்சந்திப்பில் முடிவெடுக்கப்படும். 

BLOG COMMENTS POWERED BY DISQUS