ஷா ஆலாம் தொகுதியில் அஸ்மின் அலி போட்டியா?

அரசியல்
Typography

ஷா ஆலாம், ஜன.4- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி மற்றும் பிகேஆர் மகளிர் தலைவி ஸுரைய்டா கமாரூடின் ஆகிய இருவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, ஷா ஆலாம் மற்றும் உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவ்விருவரின் பெயர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடக்கூடும் நாடாளுமன்றத் தொகுதிகள் குறித்த தகவல்கள் சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2013-ஆம் ஆண்டின் 13-ஆவது பொதுத் தேர்தலின் போது அவ்விரு தொகுதிகளிலும், பாஸ் கட்சி போட்டியிட்டு வெற்றிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆவ்விரு தொகுதிகளிலும் பிகேஆர் போட்டியிடலாம். ஆனால், இது குறித்து பேச்சு வார்த்தைதான் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பக்காத்தான் ஹராப்பானின் அனைத்து பங்காளி கட்சிகளும் ஒப்புக் கொண்டால் மட்டுமே இது சாத்தியப்படும்" எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜசெக, பிரிபூமி கட்சி, பெர்சாத்து மலேசியா மற்றும் அமானா ஆகிய கட்சிகள், பக்காத்தான் ஹராப்பானின் பங்காளி கட்சிகளாகும். 

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி, கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராவார். புக்கிட் அந்தாராபங்சாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் வகித்து வருகிறார். இதனிடையில், ஸுரைய்டா அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராவார்.  

சிலாங்கூர் மாநிலத்தில் 56 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 16 தொகுதிகளை கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக கட்சி வென்றது. பிகேஆர் மற்றும் பாஸ் கட்சிகள் அம்மாநிலத்தின் தலா 13 தொகுதிகளை வென்றன. தேசிய முன்னணி 12 தொகுதிகளையும் சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளையும் வென்றனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS