பக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் மகாதீர்!

அரசியல்
Typography

ஷா ஆலாம், ஜன.7- அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெறுமேயானால் துன் மகாதீர் பிரதமர் பொறுப்பை ஏற்பார். எதிர்க்கட்சி களின் பிரதமர் வேட்பாளராக அவர் இன்று ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேவேளையில் துணைப்பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீஸா  வான் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பக்காத்தான் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் அப்துல்லா கூறினார்.

பாரிசானிடமிருந்து புத்ராஜெயா ஆட்சியை பக்காத்தான் கூட்டணி வெல்லுமேயானால், பிகேஆர் கட்சியின் ஆலோசகராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு அரச பொது மன்னிப்பு வழங்குவதற்கு எதிர்க்கட்சி கூட்டணி விண்ணப்பம் செய்ய ஏகமனதாக முடிவு செய்திருக்கிறது. 

பிரிபூமிசெர்சத்து கட்சி, பிகேஆர், ஜசெகா மற்றும் அமானா நெகாரா ஆகிய நான்கு கட்சிகள் இந்த முடிவை ஏகமனதாக எடுத்தன.

BLOG COMMENTS POWERED BY DISQUS