ஜூன் -8ஆம் தேதி அன்வார் விடுதலை ஆவார்

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜன.7- பிகேஆர் ஆலோசகர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஜூன்-8 ஆம் தேதியன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று சிறைச்சாலை தலைமை இயக்குநர் ஜூல்கிப்ளி ஓமார் தெரிவித்தார். 

1995 ஆம் ஆண்டில் சிறைச்சாலை சட்டத்தின் 44 ஆவது பிரிவின்படி விதிக்கப்பட்ட தண்டனையின் கீழ் அவர் சிறையில் கழித்த நாள்களைக் கணக்கெடுக்கப்பட்டி ருப்பதாக அவர் சொன்னார். 

அன்வாரின் தண்டனை ஜூன் 10ஆம் தேதி முடிவிற்குக் வருகிறது. என்றாலும் அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு 2 நாள்களுக்கு முன்பாக வேலை 

நாளான வெள்ளிக்கிழமையன்றே அவர் விடுவிக்கப்படுவார் என சிறைச்சாலை தலைமை இயக்குனர் ஜூல்கிப்ளி கூறினார். 

இந்தத் தேதி மாற்றுவதற்கான எந்தவொரு உத்தரவையும் அரசாங்கத்திடமிருந்து சிறைச்சாலைத்துறை இதுவரை பெறவில்லை என்று அவர் சொன்னார். 

    

BLOG COMMENTS POWERED BY DISQUS