கோம்பாக்கில் போட்டியா? மகாதீர் நிராகரிப்பு!

அரசியல்
Typography

செத்தியாவங்சா, ஜன.15- எதிர்வரும் பொதுத்தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுமாறு பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி  விடுத்த கோரிக்கையை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நிராகரித்தார்.

"நான் லங்காவி, குபாங்பாசு அல்லது புத்ரா ஜெயா ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் தாம் போட்டியிட முடிவு செய்திருக்கிறேன்" என்று அவர் சொன்னார். 

அஸ்மின் அலியின் வேண்டுகோளை நான் மதிக்கிறேன்.  நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். ஆனால், ஏற்கெனவே நான் மேற்கண்ட தொகுதிகளில்,  ஏதாவது ஒன்றில் போட்டியிட முடிவு செய்து விட்டேன்" என்று செத்தியா வங்சா பிரிபூமி கட்சி டிவிசனைத் தொடக்கி வைத்த போது மகாதீர் தெரிவித்தார்.

தம்முடைய தொகுதியான கோம்பாக்கில் துன் மகாதீர் போட்டியிட முன்வரவேண்டும் என்றும் அத்தொகுதியை தாம் விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கோம்பாக் எம்.பி.யான அஸ்மின் அலி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS