ஜூலை மாதத்திற்கு முன்னரே 14-ஆவது பொதுத் தேர்தல்! - பிரதமர் நஜிப் 

அரசியல்
Typography

புத்ராஜெயா, பிப்.2- நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தலானது, ஜூலை மாதத்திற்கு முன்னரே நடத்தப்படலாம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மறைமுகமாகத் தகவல் தெரிவித்துள்ளார்.  

இஸ்லாமிய சமய போதகர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கொண்ட குழு ஒன்று 1எம்.டி.பியின் ஆதரவில், ஜூலை 14-ஆம் தேதியன்று, ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்ளவிருக்கிறது. 

அந்தக் குழுவைச் சேர்ந்த 1,200 பேருக்கு சலுகைக் கடிதங்களை (offer letters) வழங்கும் நிகழ்வின் போது, "நீங்கள் அனைவரும், இரண்டு 'ராயாக்கள்' முடிந்தப் பின்னரே இந்த யாத்திரைக்கான பயணத்தை மேற்கொள்வீர்கள்" என்று பிரதமர் நஜிப் கூறினார்.  

ஹரிராயா பெருநாளையும், 'பிலிஹன்ராயா' (pilihanraya) என்று மலாய் மொழியில் அழைக்கப்படும் பொதுத் தேர்தலையும் தான் அவர் அவ்வாறு கூறினார் என்பது தெளிவாக பலருக்கு விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  

இவ்வாண்டிற்கான ஹஜ் பயணத்தை இஸ்லாமியர்கள் ஜூலை மாதத்தில் தொடங்குவர்.    

அடுத்த மாதம் அல்லது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் அரசியல் வட்டாரங்களில் வலுக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய நாடாளுமன்றத்தின் ஐந்து ஆண்டுக் காலத் தவணை, ஜூன் 24-ஆம் தேதியன்று முடிவடைகிறது.  

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS