உலுசிலாங்கூரில் சுப்ரா! சுங்கை சிப்புட்டில் சரவணன்! மஇகாவில் அதிரடி தொகுதி மாற்றமா?

அரசியல்
Typography

கோலாலம்பூர், பிப். 3- அடுத்துவரும் பொதுத்தேர்தலின் போது மஇகா வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் வெவ்வேறு தொகுதிகளுக்கு இடம்மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக ஆரூடங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில்  மஇகா தேசிய தலைவரான டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிர மணியம் தமது சிகாம்புட் தொகுதியை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 இந்தத் தேர்தலில் அவர் உலுசிலாங்கூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று பாரிசான் நேஷனல் தலைவர் ஒருவரும் மற்றொரு மஇகா தலைவரும் உறுதிப்படுத்தி இருப்பதாக உள்நாட்டு இணையச் செய்தித்தளம் ஒன்று கூறுகிறது.

கடந்த தேர்தலைப் போல இம்முறையும் மஇகாவுக்கு 9 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று  உறுதியாகி இருக்கிறது. இந்த 9 தொகுதிகளில் சிகாமட்டில் டத்தோஶ்ரீ சுப்பிரமணியமும், தப்பாவில்  டத்தோஶ்ரீ சரவணனும், உலுசிலாங்கூரில் டத்தோ கமலநாதனும் கேமரன் மலையில் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலும் வெற்றி பெற்றனர்.

இவற்றை அடுத்து, தெலுக் கெமான், காப்பார்,  சுபாங், சுங்கை சிப்புட் மற்றும் கோத்தா ராஜா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ம கா தோல்வி கண்டது. 

தற்போது கமலநாதன் எம்பியாக இருந்து வரும் உலு சிலாங்கூர் தொகுதியில் டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் போட்டியிடுவார் என்று ம இகாவின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியதாக அந்தச் செய்தி தெரிவித்தது. அதே வேளையில் கமலநாதன் வேறு எந்தத் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்பது குறித்து அந்த மூத்த தலைவர் விவரிக்கவில்லை என்றும் அது கூறியது.

மேலும் இது குறித்து கமலாநாதனிடம் கேட்ட போது, வேட்பாளர் தேர்வு என்பது கட்சியின் தேசிய தலைவருடைய முன்னுரிமை என்று சுட்டிக் காட்டியுள்ளார்.  பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் தேசியத் தலைவர் இதுபற்றி முடிவு செய்வார். அவர்கள் சரியான வேட்பாளர்களைத்தான் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் சொன்னார்.

அதேவேளையில் தாப்பா தொகுதிலும் வேட்பாளர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது அந்தத் தொகுதியில் நடப்பு எம்பியாக டத்தோஶ்ரீ சரவணன் இருந்து வரும் நிலையில் அங்கு கட்சியின் உதவித் தலைவரான டத்தோஶ்ரீ தேவமணி நிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

நடப்பு தாப்பா எம்பியான சரவணன், பேராவிலுள்ள சுங்கை சிப்புட் தொகுதியில் நிறுத்தப்படலாம்.  இந்தத் தொகுதியில் மலேசிய சோசலிஸ கட்சியின் தேசியத் தலைவரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்  நடப்பு எம்பியாக

இருந்து வருகிறார். இந்தத் தொகுதியில் இம்முறை பிகேஆர் கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்பதால் மும்முனைப் போட்டி நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS