"நான் மீண்டும் பிரதமரானால், இந்தியர்களின் தேவையை நிறைவேற்றுவேன்! -துன் மகாதீர் 

அரசியல்
Typography

கிள்ளான், பிப்.4- தாம் மீண்டும் பிரதமரானால், இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன் என்று பக்காத்தான் ஹராப்பான்  எதிர்க்கட்சி கூட்டணியின் அவைத் தலைவரான துன் டாக்டர் மகாதீர் உறுதி அளித்தார்.

இங்கு நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது அடுத்து வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் அவர் உரையாற்றினார்.

14ஆவது பொதுத் தேர்தலின் முடிவுகளில் இந்திய சமுதாயத்தினரின் பங்கு மிக முக்கியமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

''மீண்டும் ஒரு முறை தாம் பிரதமராக வந்தால்  மக்களின் நலன்களில் அதிக அக்கறை செலுத்துவேன் என்று நான் உறுதி அளிக்கிறேன்'' என்று துன் மகாதீர்  சொன்னார்.

''நிச்சயமாக, இந்திய சமுதாயத்தின் தேவைகளின் மீது நான் அதிக கவனம் செலுத்துவேன். இது எனது வாக்குறுதி. நீங்கள் எங்களை ஆதரிப்பீர்கள். எனவே நான் கொடுத்த வாக்குறுதி   நிறைவேறுவது நிதர்சனம்" என்றார் அவர்.

மூன்று முக்கிய சமுதாயங்களில் மலேசிய இந்தியர்கள் மிகச் சிறிய சமுதாயம் என்றாலும் அடுத்த பொதுத் தேர்தலில் இந்த சமுதாயம் தான் முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறது என்று மகாதீர் சுட்டிக்காட்டினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS