பாகான் டாலாம்- பிறை தொகுதிகளை இம்முறை மஇகா கைப்பற்றும்! - சுப்ரா

அரசியல்
Typography

பட்டர்வொர்த், பிப்.5- பாகான் டாலாம் மற்றும் பிறை சட்டமன்றத் தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு மஇகாவிற்கு பிரகாசமாக இருப்பதாகவும் அவ்விரு தொகுதிகளையும் மஇகா இம்முறை கைப்பற்றும் என்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். 

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இந்தியர்களின் மத்தியில் மஇகாவிற்கு ஆதரவு பெருகிக் கொண்டு வருவதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், அவ்விரு தொகுதிகளையும் வெல்லும் வாய்ப்பு மஇகாவிற்கு அதிகமாகவே இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.

"அத்தொகுதிகளில் உள்ள மலாய்க்காரர்களின் ஆதரவையும், சீன சமூகத்தினரின் ஆதரவில் சிறு பங்கினையும் தேசிய முன்னணி பெறுமேயானால், பாகான் டாலாம் தொகுதியை மிக எளிதாக மஇகா வென்று விட முடியும். பிறை  சட்டமன்ற தொகுதியில்  எதிர்க்கட்சி வேட்பாளருக்கு கடும் போட்டியை எங்களால் கொடுக்க முடியும்" என்றார் அவர்.

பாகான் டாலாமின் ஜாலான் கம்போங் ஜாவா பகுதியில், பினாங்கு இந்திய சமூகச் சேவை மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட போது, செய்தியாளர்களிடம் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா மேற்கண்டவாறு கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS