இந்தியர்களுக்கு நன்மை செய்ய வேண்டிய  காலத்தில் மகாதீர் அதை செய்யவில்லை! -சுப்ரா

அரசியல்
Typography

கோலாலம்பூர், பிப்.5- கடந்த 22 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த காலத்திலேயே துன் மகாதீர் முகமட் இந்தியச் சமூகத்தினருக்கு நன்மை செய்திருக்க வேண்டும். 14-ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட்டு, பிரதமரானால் இந்தியர்களுக்கு நன்மை செய்வேன் என்று அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். 

"அவரின் 22 வருட ஆட்சிக் காலத்தின் போது அவர் இந்தியர்களுக்கு நன்மைப் புரிந்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்திருந்தால், இப்போது இந்திய சமூகத்தினரின் நிலைமை மேம்பட்டிருக்கும்" என்று டாக்டர் சுப்ரமணியம் சொன்னார். 

நேற்று கம்பாரில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தாம் வெற்றிப் பெற்றால், இந்தியர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக நாட்டின் 4-ஆவது பிரதமரான டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். 

14-ஆவது பொதுத் தேர்தலின் முடிவுகளில் இந்திய சமுதாயத்தினரின் பங்கு மிக முக்கியமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் அந்நிகழ்வில் சொன்னார். 

"இந்தியர்களுக்கு நன்மை செய்ய வேண்டிய காலத்தில் அவர் அவ்வாறு செய்யவில்லை. இப்போது காலம் கடந்து விட்டது" என்று சுகாதார அமைச்சருமான ட்த்தோஶ்ரீ சுப்ரமணியம் தெரிவித்தார். 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS