மஇகாவின் வேட்பாளர் பட்டியல்; பிரதமரிடம் வழங்கி விட்டோம்- சுப்ரா (VIDEO)

அரசியல்
Typography

கோலாலம்பூர், பிப்.19- எதிர்வரும் 14வது பொதுத்தேர்தலில் மஇகா சார்பாக போட்டியிடவிருக்கும்  வேட்பாளர்களின் முழுமையான பட்டியலைப் பிரதமரிடம் சமர்பித்துவிட்டதாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று கூறினார்.

இன்று மாலை மஇகா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இதனை அவர் தெரிவித்தார். யார் எந்த தொகுதியில் போட்டியிடவிருக்கின்றனர் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அது பற்றி தற்போது சொல்ல முடியாது என சுப்ரா கூறினார்.

ஏறக்குறைய 1.05 மில்லியன் இந்திய வாக்காளர்களில் 65 விழுக்காட்டினர் தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும் வகையில் கட்சி உறுப்பினர்கள் தங்களின் தேர்தல் இயந்திரத்தை முடக்கி விட்டிருப்பதாக அவர் கூறினார்.

மேலும், பிரதமர் கூறினால் கேமரன்மலை தொகுதியை மஇகா விட்டுக் கொடுக்குமா என்ற நிருபரின் கேள்விக்கு, கேமரன்மலை தொகுதி மஇகாவிற்கே சொந்தமானது என்றும் அதனை யாருக்கும் மஇகா விட்டுக் கொடுக்காது என்றும் இந்த நிலைப்பாட்டினைப் பிரதமரிடம் தாங்கள் கூறி விட்டதாகவும் சுப்ரா தெரிவித்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS