பக்காத்தான் பதிவு: ஆர்.ஓ.எஸ். மீது எதிர்க்கட்சிகள் வழக்கு!

அரசியல்
Typography

கோலாலம்பூர், பிப்.22- பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணியைப் பதிவு செய்வதற்காக  செய்யப்பட்ட  விண்ணப்பத்திற்கு எத்தகைய பதிலையும் சொல்லாமல் இருந்து வரும்  சங்கங்கள் பதிவுத் துறை (ஆர்.ஓ.எஸ்) அதற்கான  பதிலை வழங்க கட்டாயப்படுத்தும் நோக்கில் நீதித்துறை மறு ஆய்வைக் கோரும் வழக்கு மனுவை பக்காத்தான்  ஹராப்பான் தாக்கல் செய்துள்ளது.

இங்குள்ள உயர்நீதிமன்றப் பதிவகத்தில் இந்த வழக்குக்கான மனுவை கோபிந்த் தியோ வழக்கறிஞர் நிறுவனம் இன்று சமர்ப்பித்தது.

பக்காத்தான் செயலகத்தின் தலைவர் டத்தோ சைஃபுடின், ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பிகேஆர் தலைமைச் செயலாளர் டத்தோ சைஃபுடின் நசுசன், அமானா நெகாரா கட்சி தலைமைச் செயலாளர் அபாங் அகமட் கெர்டி, பிரிபூமி பெர்சத்து தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் சஹாருடின் ஆகியோர் சார்பில்  சங்கப் பதிவகத்திற்கு எதிராக இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS