தொகுதிச் சீரமைப்பு முறையானதல்ல! தேர்தல் ஆணையத்தை சாடியது பெர்சே!

அரசியல்
Typography

கோலாலம்பூர், மார்ச். 11- அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழான கோட்பாடுகளுக்கோ, நடைமுறைகளுக்கோ மதிப்பளிக்காத வகையில் தொகுதிகளின் மறுசீரமைப்புத் திட்டத்தை மலேசியத் தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது எனக் குற்றஞ்சாட்டி, பெர்சே 2.0 அமைப்பு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

சிலாங்கூரில் தனது இரண்டாவது கட்ட தொகுதி மக்களுடமான விசாரணையை அது முறையாக பூர்த்தி செய்யாத நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த அவசர நடவடிக்கை சட்டவிரோதமானது என பெர்சே வர்ணித்தது.

பிப்ரவரியில் சிலாங்கூரில் 250 க்கும் அதிகமான குழுக்களின் ஆட்சேபங்கள் சமர்ப்பிக்கப் பட்டன.  தொகுதி சந்திப்பு விசாரணையின் போது 50 குழுக்களுக்கு  மட்டுமே தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. 

இந்நிலையில், முறையான விசாரணைக்கு பின்னர் தாங்கள் தொகுதி சீரமைப்பு மீதான பணிகளை ஆக்ககரமான முறையில் பூர்த்தி செய்து விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதானது, இதர 200 குழுக்களின் ஆட்சேபங்களை கருத்தில் எடுத்துக்  கொண்டு அவர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் என்ற   அடிப்படை மரியாதையே காட்டாமல் தேர்தல் ஆணையம் நடந்து கொண்டிருப்பதைக் காட்டுவதாக பெர்சே கூறியது.

BLOG COMMENTS POWERED BY DISQUS