அறிகுறிகள் ஆரம்பம்: மார்ச் இறுதிக்குள் நாடாளுமன்றம் கலைப்பு?

அரசியல்
Typography

கோலாலம்பூர், மார்ச். 11- மலேசிய தேர்தல் ஆணையத்தின் தொகுதிச்  சீரமைப்பு மீதான மீதான மசோதா மார்ச் 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில்,  அந்த மசோதாவை அதற்கு முன்பே தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், இம்மாத இறுதிவாக்கில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்திற்குள் நாடாளுமன்ற கலைப்புப்  பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் எனத் தெரிகிறது. மார்ச 19 ஆம் தேதிக்கு முன்பே அல்லது மார்ச் 26 ஆம் தேதிக்குள் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்றத் தொகுதிகள் தொடர்பான எல்லைச் சீரமைப்பு மசோதா நாடாளுமன்றக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஆங்கில நாளிதழான என்.எஸ்.டி. செய்தி கூறுகிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, இந்தத் தொகுதிச் சீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில்  சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றி விட முடியும். ஏனெனில், இந்த தொகுதிச் சீரமைப்பின் வழி தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாத நிலையில் மசோதாவை நிறைவேற்ற குறுகிய பெரும்பான்மையே போதுமானது.

தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப் படுமேயானால் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 46 ஆவது ஷரத்தில் திருத்தம் செய்யப்பட்டு, பின்னர் அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மை வாக்குகளில் நிறைவேற்றப் படவேண்டியது கட்டாயமாகும்.

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS